×

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஓடும் பேருந்துகளில் இருந்து இறங்குவது பேஷனாகிவிட்டது: மனுதாரரின் மகன் மேல் தவறு உள்ளதால் 50% இழப்பீடு கழிப்பு

சென்னை: சென்னை செனாய் நகரை சேர்ந்த சசிகுமார்-ஷீலாராணி ஆகியோரின் மகன் ஆகாஷ் (14). சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2015 ஜூலை 14ல் மாநகர பேருந்தில் பயணம் செய்த ஆகாஷ், அழகப்பா நகர் பேருந்து நிறுத்தத்தில் பஸ் புறப்பட்டபோது இறங்க முயற்சித்து கீழே விழுந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஆகஸ்ட் 22ல் உயிரிழந்தார். இதையடுத்து, மகனின் இறப்புக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் ஆகாஷின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி சந்திரசேகரன் முன்பு நடந்தது. அப்போது, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அண்ணாசதுக்கத்தில் இருந்து அழகப்பா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றது. அந்த பேருந்தில் ஆகாஷ் முன்பக்க படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். பேருந்து நகரும் நேரத்தில் அவர் இறங்க முயற்சித்தபோது கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அருகில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது ஓடும் பஸ்சிலிருந்து இறங்குகிறார்கள்.

இதுபோல் மாணவர்கள் மேற்கொள்ளும்போது விபத்து ஏற்படுகிறது. இவ்வழக்கிலும் அவ்வாறே விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஓடும் பேருந்துகளிலிருந்து இறங்குவது பேஷனாகிவிட்டது. இந்த வழக்கில் போக்குவரத்து கழகம் மற்றும் மாணவர் இருவருக்கும் பங்குள்ளது. மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10.17 லட்சம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்டவரின் கவனக்குறைவுக்கு 50% இழப்பீடு கழித்து ரூ.5.08 லட்சத்தை ஆண்டுக்கு 7.5% வட்டியுடன் மாநகர போக்குவரத்து கழகம் மாணவனின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஓடும் பேருந்துகளில் இருந்து இறங்குவது பேஷனாகிவிட்டது: மனுதாரரின் மகன் மேல் தவறு உள்ளதால் 50% இழப்பீடு கழிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aakash ,Sasikumar-Sheilarani ,Senai City, Chennai ,Sethupatti ,
× RELATED ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ்...